
துளசி செடி ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச்செடி ஆகும் .இது ஆயர்வேத மருத்துவத்தில் பெரிதும் பங்கு வகுக்கிறது .
01 .தலைவலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் துளசி இலைகளை அரைத்து பற்றுப்போட தலைவலி நீங்கும் .
௦2.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ,தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .
௦3.துளசி இலைகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து ,அந்நீரை பருகுவதன் மூலம் உடலில் நன்மையானது உண்டாகும் . துளசி நீர் ஆனது காய்ச்சல் ,தொண்டைப்புண் ஆகியவற்றிற்கு நல்ல பலனைத் தரும் .
04.துளசி இலை கண் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும் .
05.துளசி இலைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வாகும் .
06.துளசிச் சாறு ஆனது நீரிழிவு மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல பலனை தரும் .
07.துளசி நீரை தினமும் அருந்தி வர நீண்ட நாள் தீராத சளி ,இருமல் பிரச்சனைகளும் தீரும் .