
கேஜிஎப் – 2 பாகத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது .இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கப்பட்டு ,தற்போது நடைபெற்று வருகிறது .கேஜிஎப் – 2(KGF Chapter-2) படமானது கோடை மாத விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது .
கேஜிஎப் – 2 படத்தில் யாஷ் ,சஞ்சய் தத் ,ரவீனா டாண்டன் ,பிரகாஷ் ராஜ் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .யாஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு உருவான கேஜிஎப்(KGF Chapter 1) கன்னட படமானது இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .இப்படம் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது .இப்படத்தை இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார் .
தற்போது கேஜிஎப் – 2(KGF chapter-2) படத்தின் டீசர் ஆனது வெளியிடப்பட்டுள்ளது .இப்படத்தின் டீசர் ஆனது கேஜிஎப் படத்தின் கதாநாயகன் யாஷின் 35 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று டீசர் வெளியிடப்பட்டது . இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்ட 14 மணி நேரத்தில் 21 மில்லியன் பார்வைகளை யுடீயூப் தளத்தில் பெற்றுள்ளது . தற்போது ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கேஜிஎப் – 2 படம் ஏற்படுத்தியுள்ளது .