
கொத்தமல்லி உடலுக்கு நன்மை பயக்கும் .உண்ணும் உணவில் கொத்தமல்லியை சேர்ப்பதால் பல நன்மைகள் உண்டாகும் .மிக மலிவாக சந்தையில் கிடைக்கக்கூடிய கொத்தமல்லியில் இரும்புச்சத்து , நார்ச்சத்து ,மாங்கனீசு போன்றவைகள் உள்ளன .கொத்தமல்லியில் பல மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளன .
கொத்தமல்லியின் பயன்கள் :
1 .உடல் எடையை குறைக்க மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி ,நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது .
2 .கண் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தவும் ,கண் பார்வையினை தெளிவாக்கவும் பயன்படுகிறது .
3 .உடலின் ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது .ரத்த சர்க்கரை அளவை குறைத்து ,இன்சுலின் சுரப்பை மேம்படுத்துகிறது .
4 .பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது .
5 .இரும்புசத்து குறைபாடு உடையவர்கள் கொத்தமல்லி இலைகளை உணவில் சேர்த்துவர நல்ல பலன்கள் உண்டாகும் . சருமத்தை மெருகேற்ற கொத்தமல்லி உதவுகிறது .
6 .சளி ,இருமலை குணப்படுத்தும் சக்தி கொத்தமல்லிக்கு உண்டு .
7 .கொத்தமல்லி உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ,உடலில் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது .
8 .வயிற்று கோளாறுகள் ,ஜீரணத்திற்கு கொத்தமல்லி உதவுகிறது .ரசத்தில் கொத்தமல்லியை சேர்ப்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கிறது .
9 .கொத்தமல்லியில் உள்ள கால்சியம் ஆனது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது .
10 .தலைமுடி வளர்ச்சிக்கும் ,உதிர்தலை கட்டுப்படுத்தவும் கொத்தமல்லி பயன்படுகிறது .