கற்றாழையின் மருத்துவ குணங்களும் அதன் பயன்களும் ..ஓர் தொகுப்பு !!

கற்றாழையானது இயற்கையாகவே நம் அன்றாட வாழ்வில் பல்வேறு வகைகளில் நமக்கு பலன்களை கொடுத்து வருகிறது .இதில் முக்கியமாக சரும பிரச்சனைகளுக்கு உகந்த தீர்வாக கற்றாழை உள்ளது .பொதுவாக நாம் அனைவரும் உடல் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்துவது வழக்கமாகும் .அதேபோல் நம் முகமானது எப்பொழுதும் பொலிவாகவும் ,அழகாகவும் தோற்றமளிக்கும் என்றே விரும்புவோம் .ஆனால் அது பல்வேறு காலகட்டங்களில் நமக்கு சாத்தியமாவதில்லை .

எடுத்துக்காட்டாக, கோடை காலத்தில் நமது முகத்தில் பருக்கள் ,எரிச்சல் ,அரிப்பு ,கட்டிகள் போன்றவை தோன்றும் .குளிர்காலத்திலும் இதற்கு இணையாக பல்வேறு பிரச்சனைகளும் சருமத்தில் நம் சந்தித்து வருகிறோம் .சருமத்தில் உள்ள செல்கள் அழுக்காக இருப்பது ஒரு முக்கிய காரணமாகும் .இதற்கு கற்றாழை ஒரு உகந்த தீர்வாக இருக்கிறது .

இன்றைய காலகட்டத்தில் நாம் இயற்கையான முறையை நாடாமல் ,செயற்கையாக கிடைக்கும் பல முக சாயத்தினையும் ,கிரீம்களையும் பயன்படுத்தி வருகிறோம் .இது நம் உடலுக்கு மறைமுகமாக பல தீங்குகளை ஏற்படுத்தி வருகிறது .இயற்கையாக கிடைக்கும் கற்றாழையை பயன்படுத்துவதால் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் முழுமையாக தீரும் .

கற்றாழையின் இயற்கை பயன்கள் :

1 .கற்றாழை ஜெல்லை நன்றாக கழுவிவிட்டு அதை முகத்தில் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் .
2 .கற்றாழை ஜெல்லுடன் சிறிது மஞ்சள் தூள் ,பால்,தேன் கலந்த கலவையினை முகத்தில் போட சருமம் பொலிவாக காட்சியளிக்கும் .
3 .எலுமிச்சை சாறுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பொலிவான தன்மை உண்டாகும் .
4 .கற்றாழை ஜெல்லானது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்க உதவுகிறது .சருமத்தை ஆரோக்கியமாகவும் ,அழகாகவும் வைத்திருக்க கற்றாழை ஜெல் பயன்படுகிறது .

Next Post

கொத்தமல்லியின் மருத்துவ குணங்கள் : நச்சுகளை வெளியேற்றும் கொத்தமல்லி ..

Thu Jan 7 , 2021
கொத்தமல்லி உடலுக்கு நன்மை பயக்கும் .உண்ணும் உணவில் கொத்தமல்லியை சேர்ப்பதால் பல நன்மைகள் உண்டாகும் .மிக மலிவாக சந்தையில் கிடைக்கக்கூடிய கொத்தமல்லியில் இரும்புச்சத்து , நார்ச்சத்து ,மாங்கனீசு போன்றவைகள் உள்ளன .கொத்தமல்லியில் பல மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளன . கொத்தமல்லியின் பயன்கள் : 1 .உடல் எடையை குறைக்க மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி ,நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது .2 .கண் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தவும் […]
coriander-leaves-kothamalli
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய