பொதுத் தேர்வின்றி தேர்ச்சிபெறும் 9 ,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் : தமிழக முதல்வர் அறிவிப்பு ..

9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோன தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கமானது அறிவிக்கப்பட்டது .பொதுமுடக்கத்தின் காரணாமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன .

இந்நிலையில் பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட பள்ளிகள் இந்தாண்டு ஜனவரியில் மீண்டும் திறக்கப்பட்டன .வகுப்புகள் நடைபெற்றிருக்கும் நிலையில் பொதுத்தேர்வு எப்போது ,எப்படி நடைபெறும் என்ற அறிவிப்பானது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,இந்நிலையில் பொதுத் தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் , பொதுத்தேர்வுகள் குறித்து ஆலோசனைககள் நடைபெற்று வந்த நிலையில் ,தமிழக சட்ட பேரவையில் இன்று விதி 110 -ன் கீழ் உரையாற்றிய முதல்வர் ,தமிழகத்தில் 9 ,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் .

Next Post

செவ்வாய் கிரகத்தில் பதிவான முதல் ஒலி : நாசா வெளியீடு..

Thu Feb 25 , 2021
வரலாற்றில் செவ்வாய் கிரகத்தில் ஒலியை பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும் . நாசாவின் அட்லஸ் விண்கலம் மூலமாக பெர்சிவரன்ஸ் விண்கலம் கடந்தாண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.பெர்சிவரன்ஸ் விண்கலமானது கடந்த 18 ஆம் தேதி செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பை அடைந்தது குறிப்பிடத்தக்கது .இந்த விண்கலத்தில் 19 பிரத்யேக கேமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளது .இந்த கேமெராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புவிக்கு அனுப்பப்பட்டு வருகிறது .இதன் மூலம் செவ்வாயின் நில அமைப்பு, அங்குள்ள பாறைகள் தொடர்பான […]
perseverance-rover-listen-sound-from-mars
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய