இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 8 கொரோனா தடுப்பூசிகள் என்னென்ன ?

இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடி வருகிறது.தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் பயன்பாட்டில் வந்து விட்டன. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு நேற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி தொடர்பாக நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், நாட்டு மக்களுக்கு இன்னும் 5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசி தயாராக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.இந்தியாவில் பயணப்பாட்டிற்கு வர உள்ள தடுப்பூசியின் முழு விவரங்கள் ..

கோவிஷீல்டு – 75 கோடி,
கோவேக்சின்- 55 கோடி,
பயாலஜிக்கல் இ- 30 கோடி,
ஜைடஸ் கேடிலா டி.என்.ஏ- 5 கோடி,
நோவாவேக்ஸ் – 20 கோடி,
பி.பி.மூக்கு வழி செலுத்தும் தடுப்பூசி- 10 கோடி,
ஜெனோவா எம்.ஆர்.என்.ஏ. – 6 கோடி,
ஸ்புட்னிக்-வி 15.6 கோடி

இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 8 தடுப்பூசிகள்:

கோவிஷீல்டு தடுப்பூசி :

கோவிஷீல்டு தடுப்பூசி தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்தத்தடுப்பூசி 90 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளது.இந்த கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாகியுள்ளன.கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியாவில் உள்ள புனேயில் இயங்கி வரும் இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கோவேக்சின் தடுப்பூசி:

கோவேக்சின் தடுப்பூசி தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் இவை இந்தியா, இங்கிலாந்து, பிரேசில் வகை கொரோனாவுக்கும் எதிராக செயல்படுகிறது.கோவேக்சின் தடுப்பூசியானது 81 சதவீதம் செயல்திறனைக் கொண்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி:

இந்தியாவில் அவசர பயன்பாட்டு ஒப்புதல் அளித்து கோவிஷீல்டு, கோவேக்சினை தொடர்ந்து 3 -வது தடுப்பூசியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியாவின் கமலேயா நிறுவனம் தயாரித்து.இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் செயல்திறனை கொண்டுள்ளது .
மேலும் இந்த தடுப்பூசி ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் தயாரித்து வழங்க இருக்கிறது.இந்த தடுப்பூசியின் 2 வது டோஸை 21 நாட்கள் இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும்.

நோவாவேக்ஸ் தடுப்பூசி:

நோவாவேக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் கோவோவேக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.இந்த தடுப்பூசியை இந்தியாவில் புனேயில் இருக்கிற இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் 96.4 சதவிகிதமாகும்.நோவாவேக்ஸ் தடுப்பூசியை அமெரிக்காவிலுள்ள நோவாவேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பி.பி. மூக்குவழியே செலுத்தும் தடுப்பூசி :

பி.பி. மூக்குவழியே செலுத்தும் தடுப்பூசியை ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்த தடுப்பூசியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வங்கியில் தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்த தடுப்பூசி தற்போது முதல் கட்ட பரிசோதனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பயாலஜிக்கல் இ தடுப்பூசி:

பயாலஜிக்கல் இ தடுப்பூசியானது ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இது 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் தயாரித்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜைடஸ் கேடிலா டி.என்.ஏ. தடுப்பூசி:

ஜைடஸ் கேடிலா டி.என்.ஏ. தடுப்பூசிக்கு தற்போது 3-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது.இந்த தடுப்பூசி ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆமதாபாத்தின் ஜைடஸ் கேடிலா நிறுவனம் ஜைடஸ் கேடிலா டி.என்.ஏ. தடுப்பூசியை தயாரித்து அளிக்கும்.

ஜெனோவா எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி:

இந்த தடுப்பூசி இன்னும் முறையாக மனிதர்கள் மீது பரிசோதிக்க படவில்லை .இது மனிதர்களுக்கு செலுத்தி இனிதான் பரிசோதிக்கப்படவேண்டும் என்ற நிலையில் உள்ளது.இந்த தடுப்பூசியை புனேயில் உள்ள ஜெனோவா மருந்து நிறுவனம் தயாரித்து அளிக்கும் .

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம் ..

Sat May 15 , 2021
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசால் இன்று புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது.தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் முழு விவரம் :
district-wise-korona-status-in-tamilnadu-14-5-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய