
பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நடப்பாண்டிலேயே நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தற்போது, நடப்பு கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நடைமுறைக்கு வரும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உள் ஒதுக்கீட்டு சலுகையைப் பெற மாணவா்கள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும். இதன்மூலம், அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு இடையே உண்மையான சமத்துவத்தை கொண்டு வருவதற்கான உறுதியான நடவடிக்கை எடுக்க முடியும் என தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களைக் கொண்டு போதிய அளவுக்கு நிரப்பப்படாமல் இருந்தால், அந்த இடங்களானது தனியாா் பள்ளிகளில் படித்த மாணவா்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.