9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 வாரம் அடிப்படை இணைப்புப் பயிற்சி : பள்ளிக்கல்வித் துறை

கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் முதல்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு அழைத்து நேரடி வகுப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது.

பள்ளிக்கு 16 மாதங்களுக்கு பிறகு வரும் மாணவர்கள் மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கக்கூடும் என்பதால் அவர்களுக்கு தொடக்கத்திலேயே பாடத்திட்டங்களை நடத்த வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக அடிப்படை இணைப்பு பயிற்சி நடத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. சிறு வினாக்கள், ஒருவரி வார்த்தைகள் போன்ற எளிய நடைமுறையில் பாடங்களை 3 வாரங்களுக்கு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு பயிற்சிக்கான செயல்திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. பள்ளி வேலை நாட்கள் மூன்றில் ஒன்றாக இதற்காக குறைக்கப்பட்டுள்ளது. 50 சதவீத மாணவர்கள் வகுப்புக்கு வருவதால் 40 நாட்கள் அடிப்படை பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்..

Mon Aug 16 , 2021
மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டது.கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து , ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று முதல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் […]
Medical-college-open-from-16th-august
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய