
இந்திய மருத்துவ படிப்பில் வரும் 2020 -21 கல்வி ஆண்டில் (நடப்பு கல்வியாண்டிலேயே) மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அகில இந்திய கோட்டாவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த ஆண்டு முதல் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 1,500 மாணவர்கள் இளங்கலை மருத்துவ படிப்புகளில் பயன்பெறுவர் என்றும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் ஆண்டுக்கு சுமார் 2,500 மாணவர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.இந்த வழக்கை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்தது. இந்த குழு ஆய்வு செய்து 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.