உலகின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் 22 இந்திய நகரங்கள்..

உலகில் மிகவும் மாசடைந்த நகரங்களில் 22 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐ.கியு.ஏர் விசுவல் நிறுவனம் “உலக காற்றின் தர அறிக்கை 2020 ” என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

2019 – 2020 ஆம் ஆண்டில், உலகளவில் மொத்தம் 106 நகரங்களில் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளபட்டது.இந்த ஆய்வில் உலகில் 30 நகரங்கள் மிகவும் மாசடைந்துள்ளன.குறிப்பாக இதில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.உலகளவில் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் சீனாவின் சின்ஜியாங் நகரமும், இரண்டாவது மாசுபட்ட நகரமாக காசியாபாத் இடம்பெற்றுள்ளது .

இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத், புலந்த்ஷர், பிஸ்ரக், ஜலால்பூர், நொய்டா, கிரேடடர் நொய்டா, கான்பூர், லக்னோ ஆகிய நகரங்களும், ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாரி மற்றும் தலைநகர் டில்லி ஆகியவை பிடித்துள்ளன.

மேலும், உ.பி.,யில், மீரட், ஆக்ரா, முசாபர்நகர், ஹரியானா மாநிலத்தில், பரீதாபாத், ஜிண்ட், ஹிசார், பதேஹாபாத், பந்த்வாரி, குர்கான், யமுனாநகர், ரோத்தக், தருஹீரா ஆகிய நகரங்களும், பீஹாரில் முசாபர்பூரும் அதிக மாசடைந்த நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் காற்று மாசு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது .இதில் குறிப்பாக போக்குவரத்து, மின் உற்பத்தி, தொழிற்சாலைகள், கட்டுமானங்கள், கழிவுகள் எரிப்பு, விவசாய கழிவுகள் எரிப்பு போன்றவைகள் காற்று மாசடைவதற்கு காரணமாக அமைகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் புதிதாக ஒரே நாளில் 28,903 பேருக்கு கொரோனா தொற்று..

Wed Mar 17 , 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பு 12.12 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோன அலை வீசி வருகிறது. இதில் குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]
corona-vaccines-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய