TNPSC பணியிடங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு..

1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்,இதில் 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்காண அறிவிப்பை வெளியிட்டது.இதில்,தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டில் நான் தேர்வு செய்யப்படவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரிக்கும்போது இடஒதுக்கீடானது தொலைதூர கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.அதாவது, தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைதூர கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

தொலைதூர கல்வியில் பயின்றுவருபவர்கள் சில பாடங்களை ஆங்கில வழியில் பயில்கின்றனர் மேலும் சில பாடங்களை தமிழ் வழியில் படிக்கின்றனர். இதனால், இவர்களை தமிழ் வழியில் பயின்றவர்களாக கருத இயலாது. டி.என்.பி.எஸ்.சி.யின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20% இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைதூர கல்வி பயின்றுவருபவர்களே பெறுகின்றனர்.எனவே இதனை முற்றிலுமாக தடுக்க வேண்டும் மேலும் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த அமர்வு 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே 20 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்,மேலும் டி.என்.பி.எஸ்.சி. யில் தமிழ்வழியில் பயின்றதற்கான இடஒதுக்கீட்டை பெற தகுதியுடையவர்கள் இவர்கள் மட்டுமே எனவும் கூறியது.

இறுதியாக, 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Post

நாடு முழுவதும் இன்று புதிதாக 40,715 பேருக்கு கொரோனா பாதிப்பு..

Tue Mar 23 , 2021
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 29,785 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பானது ௧௨.௪௩ கோடியை தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 40,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,86,796 […]
covid-19-vaccine
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய