
மே 3ஆம் தேதி திட்டமிட்டபடி 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக 9 ,10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ,12 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு ரத்தாகுமா என்று கேள்வி அனைத்து தரப்பினரிடையே எழுப்பப்பட்டு வந்த நிலையில் அதற்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பையும் ,விளக்கத்தையும் அளித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் , மேலும் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி முடிந்த அடுத்த நாளே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது .இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது .
மே 3 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டதில் எந்தவித மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது .மேலும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.