10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு..

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.அதே நேரம் தனித்தேர்வர்களுக்கு 10-ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 16 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வின் முடிவுகள் வரும் 19-ம் (19.11.2021) தேதி காலை 11 மணிக்கு வெளியாகும். www.dge.tn.gov.in தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்கள் வருகிற 19-ம் தேதி காலை 11 மணிக்கு www.dge.tn.gov.in தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2021 தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 22.11.2021 மற்றும் 23.11.2021 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Next Post

புதிய நட்சத்திர கிரகத்தை கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள் - இஸ்ரோ தகவல்..

Thu Nov 18 , 2021
வியாழன் கோளை விட பெரிய நட்சத்திர கிரகத்தை ஆமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வு கூட விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.இந்த கிரகமானது 725 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது நவீன ரேடியல் ஆய்வு கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கிரகத்தை கண்டறிய 1.2 மீட்டர் நீளம் கொண்ட தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ள கிரகமானது சிறப்பு தன்மைகளை கொண்டுள்ளது.இது வியாழன் கோளை விட 1.4 மடங்கு பெரியதாக […]
ISRO-invention-new-planet
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய