100 சைனிக் பள்ளிகளைத் திறக்க முடிவு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

சைனிக் பள்ளிகள் சமூகம், மத்திய அரசு ஆகியவற்றுடன் இணைந்து தனியார்கள் 100 சைனிக் பள்ளிகளைத் தொடங்க தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய கல்விக்கொள்கையின்படி, குழந்தைகளுக்கு கலாச்சாரத்தின் பெருமையை வளர்க்கவும், தேசத்தின் பாரம்பரியத்தை காக்கவும், தலைமைப் பண்பை உருவாக்கவும்,ஒழுக்கம், தேசபக்தி ஆகியவற்றை வளர்க்கும் மதிப்பு அடிப்படையிலான கல்வியை வழங்க ஆர்வம் காட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஏற்கெனவே இருக்கும் சைனிக் பள்ளிகளில் இருந்து புதிதாகத் தொடங்கப்படும் பள்ளிகள் தனித்தன்மையுடன் வேறுபட்டு செயல்படும். முதல் கட்டமாக தனியார், என்ஜிஓ அல்லது மாநில அரசுகள் ஆகியவற்றுடன் இணைந்து 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும்.

சைனிக் பள்ளிகளில் நாடு முழுவதும் பரவலாக மக்களுக்கு சென்றடையும் வகையில் குறைந்த செலவில் பயிலும் வகையில் கல்வி அமையும். மேலும் மாணவர்களுக்கு திறன்வாய்ந்த உடற்பயிற்சி, சமூகத்தில் பழகுதல், ஆன்மீகப் பயிற்சி, மனவலிமைப் பயிற்சி, அறிவார்ந்த பயிற்சிகள் போன்றவை இந்த பள்ளிகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23ம் ஆண்டில் தொடங்கப்படும் 100 சைனிக் பள்ளிகளில் 6ம் வகுப்பில் 5ஆயிரம் மாணவர்கள் வரை அனுமதிக்கப்படலாம். தற்போது 33 சைனிக் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் 3 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ,விருப்பமுள்ள தனியார் அமைப்புகள், தனியார் பள்ளிகள், மாநில அரசுகள், என்ஜிஓ ஆகியவை சைனிக் பள்ளிகள்சமூகத்துடன் இணைந்து பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

பி.இ., பி.டெக் துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்..

Sat Oct 16 , 2021
பி.இ., பி.டெக் துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத மாணவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில்,தற்போது துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. பி.இ, பி.டெக் மாணவா் சோ்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு முடிவில் நிரம்பாத இடங்களுக்கு, பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க […]
Engineering-Admission-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய