10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் படிப்புகள் (பிஎச்டி) : உயர்கல்வித் துறை அனுமதி..

தமிழகத்தில் 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பிஎச்டி பாடப்பிரிவுகள் தொடங்க உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2021-22 கல்வி ஆண்டு முதல் செங்கல்பட்டு இரா.வே. அரசு கலைக் கல்லூரி (வணிகவியல்), சேலம் அரசு கலைக் கல்லூரி (தாவரவியல்), கோவை அரசு கலைக் கல்லூரி (தகவல் தொழில்நுட்பம்), நாமக்கல் அறிஞர் அண்ணா அரசுகலைக் கல்லூரி (விலங்கியல்), திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி (உயிர் வேதியியல்), திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி, சென்னை நந்தனம் அரசுஆண்கள் கலைக் கல்லூரி (ஆங்கிலம்), கும்பகோணம் அரசு மகளிர்கலைக் கல்லூரி (இயற்பியல்), கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி (தமிழ்), திருப்பூர்சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி(சர்வதேச வணிகம்) ஆகிய 10 கல்லூரிகளில் பிஎச்டி பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதிக்கப்படுகிறது.

கல்லூரியில் ஏற்கெனவே பணியாற்றும் முதுநிலை உதவி பேராசிரியர்கள் பிஎச்டி பாடப் பிரிவுகளை கையாள்வதற்கும் அனுமதிக்கப்படுகிறது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சிப்படிப்புகளை (பிஎச்டி) மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர்பொன்முடி ஆக.26-ல் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

தொழில்முறை ஆங்கிலப் படிப்பு : தமிழ்நாடு உயர்கல்விமன்றம் அறிவுறுத்தல் ..

Mon Oct 11 , 2021
தொழில் முறை ஆங்கிலப் படிப்பை அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் முன்னோட்டமாக அமல்படுத்துவது குறித்து தமிழ்நாடு உயா்கல்வி மன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில், கடந்த கல்வியாண்டில் (2020-2021) இளநிலை பிரிவில் தொழில்முறை ஆங்கிலப் படிப்பு அமல்படுத்தப்பட்டது. முதல் மற்றும் இரண்டாவது பருவங்களில் தொழில்முறை ஆங்கிலப் படிப்பு கற்பிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டிலும், முதல் மற்றும் இரண்டாவது பருவங்களில் தொழில்முறை ஆங்கிலப் படிப்பை முன்னோட்டமாக […]
professional-english-studies
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய